பெயர் காரணம்(Name Reason): எள் (Sesame) என்னும் தானியத்திலிருதந்து பெறப்படும் நெய்(Ghee) யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் (Oil)என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
தனித்துவம் (Uniqueness): பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது. நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்லெண்ணெய் பயன்கள் (Benefits) :
- நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு(Hair Growth), முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
- நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் (Body Heat) வெளியேறும்.
- உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு(Glowing), மென்மையாக இருக்கும்.
- நரம்புகள்(Nerves) ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
- பொடுகுத் தொல்லை (Dandruff) இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
- தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
- கண்களின்(Eye) ஆரோக்கியம் மேம்படும்.
- நல்லெண்ணெயில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் (linoleic Acid) மிக அதிக அளவில் இருக்கிறது. நல்லெண்ணெயில் லினோலெனிக் அமிலம் (linoleic Acid) 1.6 கிராமும் உடையதால் உடலுக்கு தேவையான லினோலெனிக் அமிலம் அமிலம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது.
- இயற்கையிலேயே வைட்டமின் E (Vitamin E) இருக்கிறது, இது ஒரு antioxidant, உடலுக்கு அத்தியவசியமனதுடன் இரத்தத்தில் கொழுப்பு (Cholesterol) குறைகிறது.
- சாதாரண நிறமுடைய நல்லெண்ணெய் (மஞ்சள் ) வெப்பத்தை தங்கும் வல்லமை உடையதால், (புகை ஏற்படுத்த அதிக வெப்ப நிலையில் பயன்படுத்த முடியும்.