FEATURED CATEGORIES
FEATURED PRODUCTS
Bamboo Rice / மூங்கில் அாிசி
Banyard Millet / Kuthiraivali
Black Sesame Seeds – Naturally Grown
Boiled Banyard Millet / Pulungal Kuthiraivali
Boiled Kodo Millet / Pulungal Varagu
Boiled Little Millet / Pulungal Saamai
Brown Rice / Hand Pounded Rice
ALL-IN-ONE ECOMMERCE SOLUTION
ABOUT OUR WOODMART STORE
Nec adipiscing luctus consequat penatibus parturient massa cubilia etiam a adipiscing enigm dignissim congue egestas sapien a. Scelerisque ac non ut ac bibendum himenaeos ullamcorper justo himenaeos vel a sapien quis.
OUR LATEST NEWS
நல்லெண்ணை பயன்கள்/ BENEFITS OF SESAME OIL
பெயர் காரணம்(Name Reason): எள் (Sesame) என்னும் தானியத்திலிருதந்து பெறப்படும் நெய்(Ghee) யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் (Oil)என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது.
தனித்துவம் (Uniqueness): பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது. நோய்கள் அதிகம் வருகிறது. எனவே நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். இப்படி எடுப்பதால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்லெண்ணெய் பயன்கள் (Benefits) :
- நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு(Hair Growth), முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
- நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் (Body Heat) வெளியேறும்.
- உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு(Glowing), மென்மையாக இருக்கும்.
- நரம்புகள்(Nerves) ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
- பொடுகுத் தொல்லை (Dandruff) இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
- தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
- கண்களின்(Eye) ஆரோக்கியம் மேம்படும்.
- நல்லெண்ணெயில் மனித உடலால் தயாரிக்க முடியாத லினோலெனிக் அமிலம் (linoleic Acid) மிக அதிக அளவில் இருக்கிறது. நல்லெண்ணெயில் லினோலெனிக் அமிலம் (linoleic Acid) 1.6 கிராமும் உடையதால் உடலுக்கு தேவையான லினோலெனிக் அமிலம் அமிலம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது.
- இயற்கையிலேயே வைட்டமின் E (Vitamin E) இருக்கிறது, இது ஒரு antioxidant, உடலுக்கு அத்தியவசியமனதுடன் இரத்தத்தில் கொழுப்பு (Cholesterol) குறைகிறது.
- சாதாரண நிறமுடைய நல்லெண்ணெய் (மஞ்சள் ) வெப்பத்தை தங்கும் வல்லமை உடையதால், (புகை ஏற்படுத்த அதிக வெப்ப நிலையில் பயன்படுத்த முடியும்.
ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள் மற்றும் பயன்கள் – Castor Oil Benefits and Uses
ஆமணக்கு எண்ணெய் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய எண்ணெய் வகை ஆகும்; ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை விளக்கெண்ணெய் என்றும் கூறுவர். இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்; ஆனால், நாம் இந்த எண்ணெய் மூட்டு வலி, கீல் வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை மட்டுமே போக்க உதவும் என்று அறிவோம். இந்த எண்ணெயை பற்றி நாம் அறியாத, மேலும் பல நன்மைகள், பயன்கள் உள்ளன.
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/
ரிச்சினஸ் கம்யூனிஸ் எனும் அறிவியல் பெயர் கொண்ட ஆமணக்கு தாவரத்தின், ஆமணக்கு விதைகளில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது பல மருத்துவ பயன்பாடுகளுக்கும், தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கவும், ஷாம்பூக்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
நம்மில் சிலர் இந்த எண்ணெயால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்திக் கொண்டும் கூட இருக்கலாம். ஆங்கிலத்தில் castor oil என்று அழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் நமது உடலுக்கு அளிக்கும் முழு நன்மைகளையும் அறிந்து, நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்திக்கொண்டு இருக்க மாட்டீர்கள்; ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் பலன்கள், நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இந்த பதிப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்- Benefits of Castor Oil in Tamil
விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெயினால் ஏற்படக்கூடிய அழகு, ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் பல. இந்த பகுதியில் ஆமணக்கு எண்ணெயால் ஏற்படக்கூடிய நன்மைகள் ஒவ்வொன்றையும் பற்றி தெளிவாக படிக்கலாம், வாருங்கள்!
ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் சரும நன்மைகள்- Skin Benefits of Castor Oil in Tamil
ஆமணக்கு எண்ணெய்/விளக்கெண்ணெய் பல விதமான நன்மைகளை அளிக்கக்கூடியது; ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சரும மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.
நன்மை 1: சருமத்தை வெண்மைப்படுத்துதல்
நம்மில் பலர் வெண்மையான சருமம் பெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்; நம்முடைய இந்த விருப்பத்தை விளக்கெண்ணெயால் எளிதில் நிறைவேற்றி வைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் விளக்கெண்ணெயை சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெண்மையாக்க இயலும்.
ஆமணக்கு எண்ணெய் கொண்டு பல வழிகளில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்; இங்கு ஒரு சில வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இது வெண்மையான மற்றும் ஒளிரும் சருமம் பெற உதவும்
மேலும் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். பொலிவான, அழகான, வெண்மையான சருமம் பெற இந்த முறை உதவும்.
நன்மை 2: முகப்பருவை போக்கும்
விளக்கெண்ணெயின் நன்மைகள் பற்பல. ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பரு, வடு ஆகியவற்றை போக்க உதவும்; அவற்றை எளிதில் குணப்படுத்த உதவும்.
முகத்தை நன்றாக கழுவிய பின், மிதமான சூடு கொண்ட வெந்நீரில் ஒரு சில துளிகள் விளக்கெண்ணெயை சேர்த்து, ஒரு சுத்தமான துணி கொண்டு இந்த எண்ணெய் மற்றும் நீர் கலந்த கலவையில் ஒற்றி எடுத்து, முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்.
இதை இரவில் தூங்க செல்லும் முன் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் முகத்தை கழுவவும். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் இந்த விளக்கெண்ணெயை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
நன்மை 3: உதடுகள்
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் விரிசல்களை போக்க, மற்ற எந்த ஒரு செயற்கை அழகு சாதன பொருட்களை காட்டிலும், அதிக நன்மையை அளிக்கக்கூடியது ஆமணக்கு எண்ணெய் ஆகும்.
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/
ஆமணக்கு எண்ணெயை உதடுகளில் தேய்த்து, சற்று நேரம் நன்கு ஊற விடவும்; சிறிது நேரத்திற்கு பின், உதடுகளில் லிப் பால்ம் போன்றவற்றை தடவி கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், வெடிப்புகளற்ற, விரிசல்களற்ற, அழகான உதடுகளை பெற முடியும்.
நன்மை 4: கருவளையங்கள்
கண்களுக்கு அதிக வேலை அளிப்பதனால், சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உறக்கம் ஆகிய அடிப்படை தேவைகள் உடலுக்கு கிடைக்காததனால், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. இதனால் முக அழகு குன்றி காணப்படும்; இதை போக்க ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம்.
இரவு தூங்க செல்லும் முன், ஆமணக்கு எண்ணெயை கையில் எடுத்துக்கொண்டு, கண்களுக்கு கீழாக கருவளையங்கள் உள்ள இடத்தில் அரை நிமிடம், வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். காலையில் எழுந்து முகத்தை கழுவி விடவும்; இவ்வாறு தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் விரைவில் மறைந்துவிடும்.
நன்மை 5: நிறமூட்டல்
அதிகப்படியான மெலனின் உற்பத்தியால், சருமத்தின் நிறம் குன்றி கருமையாகலாம்; கடினமான சுற்றுச்சூழல் நிலைகள், சரியற்ற உணவு முறை போன்றவற்றால் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்கலாம். இதனால் நிறம் கருமையாகலாம்; நிறமூட்டல் பிரச்சனை ஏற்படலாம். இதனை சரி செய்ய வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட இந்த ஆமணக்கு எண்ணெய் அதிகம் உதவும்.
காலை எழுந்தவுடன் அல்லது தூங்க செல்லும் முன், சருமத்தை நன்கு கழுவி, ஒரு துணியால் ஈரத்தை துடைத்து விடவும்; பின் ஆமணக்கு எண்ணெயை கையில் எடுத்துக் கொண்டு சருமத்தில் தடவி, வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை கழுவி, துணியால் துடைத்து கொள்ளவும்; இம்முறையை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஆனால், எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் இந்த விளக்கெண்ணெயை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
நன்மை 6: வரித்தழும்புகள்
விளக்கெண்ணெயில் நன்மைகள் பல நிறைந்துள்ளன. ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஏற்படும் தழும்புகள், தோல் அழற்சி, எரிச்சலடைந்த சருமம் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். மேலும் உடலில் வரித்தழும்புகள் இருக்கும் இடத்தில் இந்த விளக்கெண்ணெயை தடவி வருவது, அத்தழும்புகளை போக்கி நல்ல பலன் பெற உதவும்; விளக்கெண்ணெயை காலை மற்றும் இரவு என இருநேரங்களிலும் வரித்தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வரவும்.
சூரிய வெளிச்சத்தால் உடல் தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது; இதில் SPF மதிப்பு கிட்டத்தட்ட 6 ஆக உள்ளதால், இதனை சூரிய ஒளி எரிச்சலால் ஏற்படும் காயத்திற்கு பயன்படுத்தலாம்.
ஆமணக்கு எண்ணெயில் காணப்படும் சில முக்கிய பண்புகள் மற்றும் சூத்திர அமைப்புகள் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகளில் கன்டுபிடிக்கப்பட்டுள்ளன; இது தோலில் காணப்படும் இறந்த செல்களை நீக்கி, இரத்த ஓட்டத்தை தூண்டி விடக்கூடியது. மேலும் இதில் ஆன்டி மைக்ரோபையல் மற்றும் அனல்ஜெசிக் பண்புகள் நிறைந்துள்ளன.
ஆமணக்கு எண்ணெய் கொப்புளங்கள் மற்றும் தீக்காயங்களையும் குணப்படுத்த உதவும்; ஆனால் இந்த எண்ணெயை பயன்படுத்த தொடங்கும் முன் பரிசோதனை செய்து, பின் பயன்படுத்தவும்.
நன்மை 7: வயதாகுதல்/ சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும்
விளக்கெண்ணெயின் நன்மைகள் பற்பல நிறைந்து உள்ளன. ஆமணக்கு எண்ணெயில் வயதாவதை தடுக்கும், சுருக்கங்களை போக்கும் பண்புகள் நிறைந்து உள்ளன என்று கூறப்பட்டாலும், அதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றே; இந்த பண்புகள் இறந்த செல்களுடன் போராடி, அவற்றை நீக்கி உடலை இளமையாக வைத்து கொள்ள உதவும்.
ஆமணக்கு எண்ணெய் கொண்டு கண், வாய், நெற்றி, மூக்கு, நாடி, கழுத்து என எல்லா பகுதிகளில், அவற்றை சுற்றிய இடங்களில் மெதுவாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீர் கொண்டு கழுவ வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.
ஆனால், சருமத்தில் எரிச்சல், அரிப்பு, தழும்புகள், சிவந்த தடிப்புகள் ஆகியவை இருந்தால், முறையான சரும பரிசோதனை செய்த பின், விளக்கெண்ணெயை பயன்படுத்துவது நல்லது.
நன்மை 8: வீக்கமடைந்த தோல்
சருமத்தில் சொறி, சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அவற்றால் சருமம் வீங்கியிருந்தாலோ, சருமத்தில் சுளுக்கு ஏற்பட்டு அதனால் வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ அவற்றின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால், இந்த எல்லா பிரச்சனைகளும் குணமாகும். விளக்கெண்ணெய் கொண்டு நீவி விடுவது சுளுக்கை விரைவில் குணப்படுத்த உதவும்.
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/
நன்மை 9: மாய்ஸ்ட்ரைஸர்
நமது உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும் கொலாஜன், எலாஸ்டின் ஆகியவற்றை உற்பத்தி செய்ய ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது. இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் மற்றும் தோலினிடையே ஆக்சிஜன் ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆமணக்கு எண்ணெய் நம் உடலை இளமையோடும், ஈரப்பதத்தோடும் வைத்திருக்க உதவுகிறது.
நன்மை 10: தோல் சார்ந்த கோளாறுகள்
தோலில் ஏற்படக்கூடிய பருக்கள், வடுக்கள், தழும்புகள், சிவந்த தடிப்புகள், சொறி, சிரங்கு போன்ற எல்லா வித தோல் சார்ந்த கோளாறுகளையும் போக்க ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது; தோல் சார்ந்த கோளாறுகளை குணப்படுத்த, ஆமணக்கு எண்ணெயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெரிதும் பயன்படுகின்றன.
ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் தலைமுடி நன்மைகள்- Hair Benefits of Castor Oil in Tamil
ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள் பல; ஆமணக்கு எண்ணெய் சருமத்திற்கு பற்பல நன்மைகளை வழங்குவதுடன், தலைமுடியின் வளர்ச்சிக்கும், தலை முடி தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் கூட பயன்படும். அவ்வகையில் ஆமணக்கு எண்ணெயால் ஏற்படக்கூடிய தலைமுடி நன்மைகள் யாவை என்று இங்கு பார்க்கலாம்.
நன்மை 1: தலை முடியின் வளர்ச்சி
தலைமுடியின் வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் உதவும் என்று இதுவரை சான்றுகளும் கண்டறியப்படவில்லை; ஆனாலும், இதை தலைமுடிக்கு முயற்சித்து பார்க்க்கலாம். உச்சந்தலையில் ஆமணக்கு எண்ணெயை தடவி விட்டு, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரங்கள் ஊற வைத்து, பின் ஷாம்பூ போட்டு தலை முடியை கழுவவும்.
இவ்வாறு செய்து வருவது தலை முடியின் வளர்ச்சியை தூண்ட உதவலாம்; ஆனால், எந்த ஒரு அழகு செய்முறையையும் செய்ய தொடங்கும் முன் மருத்துவரிடம் கலந்துரையாடுவது நல்லது.
நன்மை 2: பொடுகு
ஆமணக்கு எண்ணெயில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல வித சரும நன்மைகளை அளிப்பதோடு, ஆரோக்கியமான கூந்தலை பெறவும் இவை உதவுகின்றன; விளக்கெண்ணெயில் இருக்கும் இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலையில் பொடுகு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன.
நன்மை 3: நரை முடி
சில ஆய்வுகள் ஆமணக்கு எண்ணெய் உடைந்த அல்லது பிரிந்த முடி நுனிகளை சரிப்படுத்த உதவும் என்று கூறுகின்றன; மேலும் இந்த ஆய்வுகள் ஜோஜோபா எண்ணெய், கடுகு விதை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்த கலவை, நரை முடி பிரச்சனையை போக்கி, மீண்டும் கருமையான கூந்தலை பெற உதவுவதாக கூறுகின்றன. ஆனால், இதனை உறுதி செய்யக்கூடிய அளவு, போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
நன்மை 4: தொற்றடைந்த உச்சந்தலை
ஆமணக்கு எண்ணெயில் இருக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் செபோரிக் டெர்மாடிடிஸ் எனும் உச்சந்தலையில் திட்டுக்களை உண்டாக்கக்கூடிய தோல் வியாதியை குணப்படுத்த உதவுகின்றன. மேலும் ஆமணக்கு எண்ணெய், உச்சந்தலை வறண்டு போகுதல், உச்சந்தலையில் ஏற்படகூடிய திட்டுக்கள் முதலிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது
விளக்கெண்ணெயில் காணப்படும் இந்த பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகள், பிரச்சனைகள், கூந்தல் பிரச்சனைகள் போன்றவற்றை போக்க உதவுகின்றன.
நன்மை 5: கூந்தலை நிலைப்படுத்தும்
ஆமணக்கு எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்று நிரூபிக்கும் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், ஆமணக்கு எண்ணெயை தேங்காய் எண்ணெயில் சில துளிகள் சேர்த்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தை காண முடியும் என்றும், இது தலையில் ஏற்படும் பொடுகை போக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்- Health Benefits of Castor Oil in Tamil
இதுவரை ஆமணக்கு எண்ணெயின் அழகு சார்ந்த நன்மைகளை பற்றி படித்து அறிந்தோம்; ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள் பல. இனி விளக்கெண்ணெயால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை பற்றியும் படித்தறியலாம், வாருங்கள்!
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/
நன்மை 1: மலச்சிக்கல்
ஆமணக்கு எண்ணெயால் ஏற்படக்கூடிய முக்கிய நன்மைகளுள் முதன்மையானது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிப்பதாகும். இந்த எண்ணெய் ஒரு தூண்டுதல் மலமிளக்கியாகும். ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொண்டால், அது மலக்குடலின் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்க உதவும்.
ஆனால், இந்த விளக்கெண்ணெயை அளவாக பயன்படுத்துவது அவசியம்; அளவுக்கு மீறி பயன்படுத்தினால், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். ஆகையால், முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொண்ட பின், ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துங்கள்.
ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஒத்தட முறைகள், மலச்சிக்கலின் அறிகுறிகளால் ஏற்படும் பாதிப்பை போக்க உதவும்; மேலும் இது மலத்தை வெளியேற்ற முயல்கையில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், மலம் வெளியேறிய பின் ஏற்படக்கூடிய அசௌகரிய உணர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துங்கள்; பொதுவாக, 3 தேக்கரண்டிகள் அளவு இருக்கக்கூடிய, 15 மில்லி லிட்டர் ஆமணக்கு எண்ணெயை எடுத்துக்கொண்ட பின், 2 முதல் 3 மணி நேரத்திற்குள்ளாக மலம் வெளியேற வேண்டியது அவசியம்.
மலச்சிக்கலை போக்க விளக்கெண்ணெயை பயன்படுத்துவது குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்தலாம்; இது ஒரு சாதாரண பக்க விளைவே! ஆனால், இது அளவுக்கு அதிகமாக ஏற்பட்டால், உடனே மருத்துவரை சென்று காண வேண்டியது அவசியம்.
நன்மை 2: கீல் வாதம்/ மூட்டு வலி/ முழங்கால் வலி
ஆமணக்கு எண்ணெய் அழற்சி குறைபாடுகளை போக்க உதவும்; இதில் இருக்கும் ரிஸினோலெயிக் அமிலம், அற்புதமான அனல்ஜெசிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது(8)
இன்னொரு ஆராய்ச்சி படிப்பினை, ஆமணக்கு எண்ணெய் தொடக்க நிலை முழங்கால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் பிரச்சனைகளை பயனுள்ள வழியில் குணப்படுத்த உதவும் என்று கூறுகிறது(9). ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் குறைபாடுள்ள நபர்கள், தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஆமணக்கு எண்ணெயை தினசரி பயன்படுத்தி வந்ததனால், நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.
கீல் வாத நோய்க்குறைபாட்டில் இருந்து விடுபடுவது எளிதான காரியமே! தொடர்ந்து ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி வந்தால், சரியான பலன் கிடைக்கும்.
நன்மை 3: வயிறு தொடர்பான கோளாறுகள்
வயிறு தொடர்பாக அல்லது வயிற்றில் ஏற்படும் சிறு பிரச்சனைகளில் இருந்து, பெரும் பிரச்சனைகள் வரை அனைத்தையும் குணப்படுத்த ஆமணக்கு எண்ணெய் அக்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண வயிறு சார்ந்த பிரச்சனைகளான, வாந்தி, குமட்டல், வயிறு வலி, செரிமான கோளாறு முதல் சற்று தீவிர குறைபாடுகளான மலச்சிக்கல், பேதி, வயிற்றுப்போக்கு, சிறுநீரக கற்கள் போன்றவற்றை குணப்படுத்த விளக்கெண்ணெய் பயன்படுகிறது.
நன்மை 4: படர்தாமரை/ படை
ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில், குறிப்பாக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டவை. சருமத்தில் மற்றும் உச்சந்தலையில், பூஞ்சை அல்லது கேண்டிடா தொற்றுகளால் உருவாகும் படை அல்லது படர்தாமரை போன்றவற்றை சரிப்படுத்த, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்து, தொற்று உள்ள இடங்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்
நன்மை 5: காயங்களை குணப்படுத்தும்
உடலில் ஏற்படும் காயங்களை, புண்களை குணப்படுத்தும் பண்புகள் ஆமணக்கு எண்ணெயில் நிறைந்துள்ளன; இந்த எண்ணெயை காயங்கள் உள்ள இடத்தில் தடவுவதன் மூலம், காயங்களை விரைவில் குணப்படுத்த இயலும்; மேலும் காயங்கள் காய்ந்து போய், புண்கள் தீவிர நிலையை அடைவதை தடுக்க முடியும்.
காயங்களால் சருமத்தில் நாள்பட்ட அழுத்தம் அல்லது வடுக்கள் உண்டாகாமல் காக்கவும் இந்த விளக்கெண்ணெய் உதவும்.
நன்மை 6: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆமணக்கு எண்ணெயால் வெளிப்புற உடல், சருமம், அழகு போன்ற விஷயங்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன; அதே போல் உட்புற உறுப்புகள், உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஆமணக்கு எண்ணெய் உதவும்.
ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் பண்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தைமஸ் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்; மேலும் விளக்கெண்ணெய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை தூண்டி விடவும், நிணநீர் வடிகால் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
நன்மை 7: உடல் எடையை குறைக்கும்
ஆமணக்கு எண்ணெயை 2 முதல் 3 தேக்கரண்டி உணவாக அல்லது உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடல் எடை ஒரு சில பவுண்டுகள் வரை குறைந்து வருவதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். உணவுடன் சேர்த்து உண்ண விருப்பமில்லாத நபர்கள் உணவுக்கு முன் அல்லது பின் 2 முதல் 3 தேக்கரண்டி விளக்கெண்ணெயை பழச்சாறு போன்ற பானங்களில் சேர்த்து பருகலாம்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், இரண்டு வாரங்களில் 10 பவுண்டுகள் வரை எடை குறைய வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க ஆமணக்கு எண்ணெய் கொண்டு ஒத்தடம் போன்ற பேக் செய்தும் பயன்படுத்தலாம்; மேலும் ஆமணக்கு எண்ணெயை இஞ்சி, கிரீன் டீ போன்றவற்றுடன் கலந்து உடல் எடை குறைப்பு பானம் செய்தும் பருகலாம். இந்த முறைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.
நன்மை 8: சிறுநீரக கற்கள்
ஆமணக்கு எண்ணெயில் பல சரும மற்றும் அழகு நன்மைகளை பயக்கும் பண்புகள் நிறைந்திருப்பதோடு, அதில் சில முக்கிய மருத்துவ நோய்க்குறைபாடுகளை சரி செய்யும் விஷயங்களும் நிறைந்துள்ளன. ஆமணக்கு எண்ணெய் பற்பல மருத்துவ நோய்க் குறைபாடுகளை போக்க வல்லது; குறிப்பாக, சிறுநீரக கற்களை உடைத்து கரைக்கும் வலிமை கொண்டது.
சிறுநீரக கற்கள் பிரச்சனை கொண்ட ஒரு நபரை படுக்க வைத்து, அவரின் வயிற்றின் மேல் பகுதியில் இருந்து, தொடை வரை, ஆமணக்கு எண்ணெயில் நன்கு ஊறவைக்கப்பட்ட ஒரு மிருதுவான துணியை விரித்து வைக்கவும். இதன் மேல் இன்ஃப்ரா ரெட் என்று சொல்லக்கூடிய அகச்சிவப்பு விளக்கின் ஒளியை படுமாறு வைத்துவிட்டு, சில மணி நேரங்கள் கழிந்த பின் சோதித்து பார்த்தால், சிறுநீரக கற்கள் பெருமளவு உடைந்து, கரைந்து, மறைந்து போயிருப்பதை அறியலாம். இது தவிர சிறுநீரக கற்களை குணப்படுத்த ஆமணக்கு எண்ணெயை வேறு பல வழிகளிலும் கூட பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்மை 9: இருமல் மற்றும் சளி
இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை போக்க விளக்கெண்ணெய் ஒரு நல்ல வீட்டு வைத்தியம் ஆகும்; இயற்கையான விளக்கெண்ணெய், 2-3 பல் பூண்டு, 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி, அரை தேக்கரண்டி சிவந்த மிளகாய் பொடி, 3 முதல் 4 தேக்கரண்டி யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, கலந்து செய்த கலவையை மார்பு பகுதியில் தடவி வருவது உதவும்.
ஆமணக்கு எண்ணெயை உடல் உறிஞ்சி, உடலின் ஓட்டத்தை மேம்படுத்தும்; மேலும் யூக்கலிப்டஸ் எண்ணெயில் ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் நிறைந்துள்ளன; இஞ்சி மற்றும் சிவந்த மிளகாய் பொடி உடலின் இயக்கத்தை தூண்டி, சளியை குறைக்க உதவும்.
நன்மை 10: முதுகு வலி
பல நூற்றாண்டுகளாக தலை சிறந்த வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது ஆமணக்கு எண்ணெய்; இது மலச்சிக்கல் போன்ற இதர நோய்க் குறைபாடுகளை போக்க உதவும். ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும், நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
அடர்ந்த ஆமணக்கு எண்ணெயை ஒரு சிறிய நாணயம் அளவிற்கு எடுத்துக் கொண்டு, அதனை முதுகில் வலி உள்ள இடத்தில் தடவி, மெதுவாக, நன்கு மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வந்தால், முதுகு வலி முற்றிலும் மறைந்து விடும்.
ஆமணக்கு எண்ணெயின் வகைகள்- Types of Castor Oil in Tamil
ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை சில குறிப்பிட்ட வகைகளில் பிரிக்கலாம்; ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படும் இந்த விளக்கெண்ணெய், ஆர்கானிக் அதாவது இயற்கையான ஆமணக்கு எண்ணெய், ஜமைக்கா கருப்பு ஆமணக்கு எண்ணெய், ஹைட்ரோஜெனரேட்டட் ஆமணக்கு எண்ணெய் என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
ஆர்கானிக் அதாவது இயற்கையான ஆமணக்கு எண்ணெய்
சாதாரணமாக ஆமணக்கு விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஆர்கானிக் விளக்கெண்ணெய் ஆகும்; இது பொதுவான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது; இதிலிருந்து வேதிப்பொருட்களை நீக்கி பயன்படுத்துவது மேலும் அதிக நன்மை பயக்கும். இது மஞ்சள் நிறம் கொண்டது.
ஜமைக்கா கருப்பு ஆமணக்கு எண்ணெய்
ஜமைக்கா கருப்பு ஆமணக்கு எண்ணெய் வறுத்த ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது; இது புகைந்த மணம் மற்றும் கருப்பு நிறம் கொண்டது. இது முகப்பரு, வடுக்கள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
ஹைட்ரோஜெனரேட்டட் ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்து உருவாக்கப்படுவது ஹைட்ரோஜெனரேட்டட் ஆமணக்கு எண்ணெய் ஆகும். இது கடினத்தன்மை கொண்டது; எளிதில் நீரில் கரையாது; பெரும்பாலான அழகு சாதன பொருட்கள் தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயின் ஊட்டச்சத்து மதிப்பு – Castor Oil Nutritional Value in Tamil
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/
ஆமணக்கு எண்ணெயில் ரிஸினோலெயிக் அமிலம் எனும் தொகுதி அதிகம் காணப்படுகிறது; 90% எண்ணெயில் இந்த அமிலம் தான் நிறைந்துள்ளது. இதில் காணப்படும் மற்ற அமிலங்களாவன:
- லினோலெயிக் அமிலம் (4% எண்ணெயில்)
- ஒலெயிக் அமிலம் (3% எண்ணெயில்)
- ஸ்டீரியாக் அமிலம் (1%)
- இதர லினோலெயிக் கொழுப்பு அமிலங்கள் (>1%)
ஆமணக்கு எண்ணெயால் ஏற்படும் பக்க விளைவுகள்- Side Effects of Castor Oil in Tamil
ஆமணக்கு எண்ணெயால் பற்பல நன்மைகள் ஏற்பட்டாலும், இந்த எண்ணெயால் சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- பிரசவ வலியை தூண்டும்
ஆமணக்கு எண்ணெயால் எதிர்பார்த்த பலன்கள் விளைந்தாலும், சில நேரங்களில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது கர்ப்ப காலம் முழுவதும் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் ஆமணக்கு எண்ணெயை எடுத்துக் கொள்ளும் தேவை ஏற்பட்டால், மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்
ஆமணக்கு எண்ணெயில் ரிஸின் என்னும் ஒரு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் உள்ளது. சந்தைகளில் கிடைக்கும் ரிஸின் நீக்கப்பட்ட ரீஃபைண்ட் ஆமணக்கு எண்ணெய்களை பயன்படுத்தும் பொழுது கூட நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் கவனிக்க தவறினால், இதனால் வயிற்றுப்போக்கு, பெருங்குடல் சார்ந்த அடிவயிற்று வலி, வாந்தி எடுத்தல், நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- அலர்ஜி அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்
சில நபர்களுக்கு விளக்கெண்ணெயை தோலில் பயன்படுத்துவதால், சில சமயங்களில் ஒவ்வாமை தொந்தரவுகள் ஏற்படலாம். தோலில் இந்த ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தும் முன், பேட்ச் பரிசோதனை செய்து கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் பொய்யான எதிர்மறை பலன்கள் கிடைப்பதை தடுக்க முடியும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் – Castor Oil for Pregnancy in Tamil
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் ஏற்படும் மலச்சிக்கல் குறைபாட்டை போக்க ஆமணக்கு எண்ணெய் உதவும்; இதில் இருக்கும் மலமிளக்கும் பண்பு இவர்களுக்கு பெரிதும் உதவும். கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்கள் 10 முதல் 20 மில்லி லிட்டர் வரை பயன்படுத்தலாம்; குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் ஆமணக்கு இலையை, ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து வதக்கி, ஒத்தடம் அளித்தால், பால் கட்டு குணமாகலாம்.
ஆனால், விளக்கெண்ணெயை பயன்படுத்தும் முன்னர், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை பற்றியும், எந்த அளவில் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம் என்பது பற்றியும் மருத்துவரிடம் விசாரித்து அறிய வேண்டியது அவசியம்.
ஆமணக்கு எண்ணெயால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Castor Oil Benefits and Side Effects for Babies in Tamil
ஆமணக்கு எண்ணெயால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இங்கு படிக்கலாம்.
- குழந்தைகளில் பலர் உணவு உண்ண மறுப்பர்; சிலர் மந்தமாக இருப்பர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. ஆனால், மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த மருந்துகளை அல்லது விளக்கெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
- ஆமணக்கு எண்ணெயில் மலம் இளக்கும் தன்மை நிறைந்திருப்பதால், சரியான அளவில் அதை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்; குழந்தைகளின் விஷயத்தில் சுயமாக எந்த ஒரு வைத்திய முறையையும் மேற்கொள்ளாமல், மருத்துவரிடம் உரிய அனுமதி பெற்று பயன்படுத்தவும்.
- ஆமணக்கு எண்ணெய் குழந்தைகளின் நிறத்தை அதிகரிக்கவும், அவர்தம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலை போக்கவும் உதவும். மருத்துவர் பரிந்துரைக்காமல் இந்த எண்ணெயை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
- சளி, கோழைக்கட்டு, இருமல் ஆகிய பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு 20 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 10 மில்லி லிட்டர் தேன் ஆகியவற்றை கலந்து கொடுத்தால், மலச்சிக்கல் விரைவில் நீங்கும்; மேலும் மந்த வயிறு கொண்டவர்களுக்கு இந்த ஆமணக்கு எண்ணெயை சுக்கு கஷாயம் அல்லது ஓம நீர் போன்றவற்றில் கலந்து அளித்தால், அது மந்தத்தை நீக்கி பசியை ஏற்படுத்தும். ஆனால், மருத்துவ அறிவுரை இல்லாமல், எந்த ஒரு வழிமுறையையும் பின்பற்ற வேண்டாம்; அது பாதுகாப்பானது அல்ல.
ஆமணக்கு எண்ணெயை பல வருடங்களாக, தலைமுறை தலைமுறையாக நாம் பயன்படுத்தி வருகிறோம்; இந்த எண்ணெய் நீண்ட வரலாறு கொண்டது. இதில் நோய்களை, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த எண்ணெயை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆமணக்கு எண்ணெயை எந்த ஒரு மருத்துவ ஆலோசனையும் இல்லாமல், பயன்படுத்துவதை தயவு செய்து தவிருங்கள்; ஆரோக்கியத்திற்கு, சருமத்திற்கு அல்லது தலைமுடிக்கு, என எந்த ஒரு விஷயத்திற்கும் இதை பயன்படுத்தும் முன்னர், உரிய பரிசோதனை/ பேட்ச் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.
ஆமணக்கு எண்ணெயை நீங்கள் பயன்படுத்தி உள்ளீர்களா? உங்களது அனுபவம் எப்படி இருந்தது? என்பது போன்ற விஷயங்களை கமெண்ட் பாக்ஸ் வழியாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Order Pure Cholaa Cold Pressed Castor Oil @ https://cholaa.in/product/castor-oil-premium/